தோழியைப் பார்த்து, நீ எப்போ வந்த? உனக்காக நான் ரொம்ப நேரமா காத்துகிட்டு இருதேன், அப்புறம் இன்னைக்கு மழை தூரிட்டே இருந்ததுல, அதான் குடை கொண்டு வந்தேன். அதை காய வேற வைக்கணும், இரு வரேன்னு எழுந்திருச்சு போய் ஃபேன் சுவிட்சை போட்டுட்டு குடைய விரிச்சு வச்சுட்டு வந்து மேசையில் உட்கார்ந்து கொண்டாள் மோனிகா.. ஏய் ஏய் அந்த ஃபேன ஆஃப் பண்ணுங்க ரொம்ப குளிருது, இந்த மோனிகாவுக்கு அறிவே கிடையாது. இப்படி மழை பெய்யுது, அடிக்கிற காத்துல நம்ம ஸ்கூலே பறந்துடும் போல, குடைய காய வைக்கிறாளாம் குடைய, இவளோட குடை மட்டும் தான் ஏதோ ஈரமா இருக்குற மாதிரி ஓவராதான் பண்ணுறா. இனிமேல் யாராச்சும் ஃபேன் சுவிட்சில கைய வச்சிங்கன்னா என்னோட இன்னொரு முகத்த பார்ப்பிங்கன்னு ஒரு பயங்கரமான சத்தத்தைப் போட்டுட்டு உட்காருகிறாள் அக்சயா. அப்போது மிஸ் கிளாஸுக்குள்ள நுழையுறாங்க. என்ன? என்ன? உங்க வகுப்புல மட்டும் ஏன் இப்படி ஒரு சத்தம்? மழை பெய்யுறது கூட இவ்ளோ சத்தம் இல்ல! மீன் மார்க்கெட் தோத்துப் போயிடும் போல! யாரு அந்த கத்து கத்துனது? அங்க நாலு வகுப்பறைகள தாண்டி கேட்டுச்சு ஃபேன் ஃபேனுன்னு கத்துனது. கேட்டுட்டே இருக்கேன்ல, யாருன்னு சொல்லுங்க? என்று மிஸ் கேட்கிறார். பிள்ளைங்க எல்லாரும் முணுமுணுத்துக்கிட்டு இருக்காங்க. அக்சயா வேற, ப்ளீஸ் சொல்லாதீங்க! யாரும் என்னை மிஸ் கிட்ட சொல்லாதீங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கா. என்ன? எல்லாரும் ஏன் உங்களுக்குள்ளேய பக்கத்துல பக்கத்துல பேசுறீங்க? எல்லாரும் அமைதியா இருங்க. அக்சயா எழுந்திருன்னு மிஸ் சொல்லுறாங்க. அவளும் தயக்கதோட பயந்து பயந்து எழுந்திருக்கவா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டே எப்படிேயா மாட்டிக்கிட்டாேம்ன்னு எழுந்து நிக்குறா. சொல்லு அக்சயா, யாரு ஃபேன் ஃபேன்னு கத்துனது? சொல்லுங்கிறாங்க. அடடா நல்லேவைள மிஸ் பார்க்கல போல, சும்மா குத்துமதிப்பாதான் அக்சயா எழுந்திரினு எழுப்பிருக்காங்க, மத்தபடி எதுவும் இல்ல போல, சரி வேற யாராச்சும் என்னப் பத்தி போட்டுக் கொடுக்கறதுக்குள்ள நம்ம தப்ப நம்மளே ஒத்துக்கிட வேண்டியதுதான்னு மிஸ் மிஸ்ங்கிறா அக்சயா. ம் சொல்லுடா அக்சயா! நீ கண்டிப்பா பொய் சொல்லமாட்டன்னு தெரிஞ்சுதான் உன்கிட்ட கேக்குறேன். யாருன்னு மட்டும் தெரியட்டும் அப்புறம் அவங்களுக்கு இருக்குது பெரிய கச்சேரின்னு சொல்றாங்க மிஸ். இப்போ அக்சயாவுக்கு பயம் இன்னும் அதிகமாகிடுச்சு. ஆண்டவா என்ன நடக்க போகுதோ தெரியலையே? மிஸ் சரியான கோபத்துல இருக்காங்கன்னு நல்லா தெரியுது, என்னோட நிலைமை என்னாகப்போகுதுன்னு என்னால நினைச்சுக்கூட பாக்க முடியலையே? ரொம்ப கொடூரமாதான் இருக்கும்னு நினைக்குறேன். இன்னைக்கு நான் என்னோட முகத்திலதான் முழிச்சேன்! எல்லாம் என் நேரம்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு, மிஸ் நான்தான் மிஸ் கத்துனதுன்னு சொல்லிட்டா அக்சயா. உடனே மிஸ் கைத்தட்டுறாங்க. சபாஷ்! அக்சயா அக்சயாதான். நான் சொன்ன மாதிரி பொய் சொல்லாம உண்மையை சொல்லிட்டியே! நீ கத்துனதையும் பார்த்தேன், வகுப்பறையில என்ன நடந்துச்சுன்னும் எனக்கு நல்லா தெரியும். நிஜமாவே நீ ஒரு பொய்யை மட்டும் சொல்லி தப்பிச்சிடலாம்னு நினைக்காம உன்னுடைய நேர்மையான குணத்தை வெளிப்படுத்தி பண்பா இருந்ததால, அடுத்த வாரம் நடக்கப்போற நம்ம பள்ளியோட பொங்கல் கச்சேரி போட்டியில உன்ன நம்ம வகுப்போட போட்டிக்குழு தலைவரா ஆக்குேறன்னு சொல்லி, வாழ்த்துகள் அக்சயா! அப்படின்னு சொன்னாங்க பல்லவி மிஸ். தனக்கு கச்சேரி நடக்கப்போகுதுன்னு நெனச்ச அக்ஷயாவுக்கு பள்ளியில நடக்கப்போற கச்சேரி போட்டியின் வகுப்போட போட்டிக்குழு தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டது ரொம்ப சந்தோசமாவும் உண்மைக்கான பரிசாவும் இருந்தது.